தமிழர்களின் அடையாளமும் அபிலாசைகளும்

இணையவழி கருத்துப்பகிர்வு

தமிழர்களின் அடையாயங்கள் நிலம், கல்வி, சமூக வாழ்கைமுறை, மருத்துவத் தேவைகள், அரசியல் அபிலாசைகள் போன்ற ஈழத்து தமிழர்களின் மிகமுக்கிய இந அடையாளங்களும் அபிலாசைகளும் கடந்த  70 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. எமது நோக்கம்: புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் இளையதலைமுறையினர்க்கு தெளிவூட்டல் மற்றும் கற்ப்பிக்கும் நோக்கத்துடன் ஆரம்பித்து நடாத்தப்பட்டு வருகின்றது.  இந்த நிகழ்வில்  இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட தலைப்பில் உரையாற்றுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பளிக்கப்படுவதே எமது முக்கிய நோக்கமாகும்.  இவ்வேற்ப்பாட்டின் மூலம் இளைய தலைமுறையினருக்கு தமிழரின் அடையாளமும் அபிலாசைகளும் பற்றிய அறிவூட்டலை தெளிவுபடுத்த முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.  தமிழர்களின் அடையாயங்கள் நிலம், கல்வி, சமூக வாழ்க்கைமுறை , மருத்துவ தேவைகள், அரசியல் போன்ற விடையங்கள்  70 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்த கருத்தரங்கில் பின்வரும் விடையங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்;  1   தமிழர்களின் அடையாளங்கள்  தமிழீழத்தில் அழிக்கப்படுவதனை, எப்படி புலம்பெயர் இளைய தலைமுறைத் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை இன்றைய காலகட்டத்தில் உள்ள சமூக ஊடகங்கள், சர்வதேசப் பொறிமுறைகள் மூலமாக ஏற்படுத்த முடியும்? 2   இவற்றை தடுக்க புலம்பெயர் சமூகத்திடம், தமிழீழத்தின் உறவுகள் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும்? 3   தமிழீழத்தில் இருக்கும் உறவுகளின் அபிலாசைகள் (ஏக்கம் அல்லது நோக்கம்) நிறைவேற என்ன செய்ய வேண்டும்?  4   தமிழீழத்தின் உறவுகளும், புலம்பெயர் உறவுகளும் இணைந்த கைகளாய்ப் பயணிப்பதற்கு ஆக்கபூர்வமாக என்ன செய்ய வேண்டும்? 5   இதனை எப்படி உள்நாட்டு வெளிநாட்டு அரசாங்கங்களின் சட்ட வரைவுக்குள் அமைக்க முடியும்? என்பனவாகும்.  

பேச்சாளர்கள்

பாலசுந்தரம் இளையதம்பி 

ஈழத்தமிழரின் பூர்வீக அடையாளங்களும் பாரம்பரிய கலை முகங்களும் 

நிரூஜா தவநேசன் 

காந்தாள் பூவின் தன்மைகளும், தேசிய பூவாகியதன் மகிமையும்  

ராதிகா சிற்சபைஈசன் 

புலிகளின் கொடியா அல்லது தமிழர்களின் தேசிய கொடியா?  நிசா பீரிஸ் ஈழத்தமிழரின் பூர்வீக அடையாளங்களும், அபிலாசைகளும்.  

விமல் நவரத்தினம் 

தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிதைத்து- திண்டாடும் திட்டங்கள் தொடர்கின்றன-